பாலின அங்கீகார சான்றிதழ் பெற கட்டணம் குறைப்பு

 

 

பிரிட்டனில் பாலின அங்கீகார சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்பக் கட்டணம் 140 பவுண்டில் இருந்து வெறும் 5 பவுண்டாக குறைக்கப்பட்டுள்ளது.

 

பிரிட்டனில் திருநங்கைகளும், ஓரினச்சேர்க்கையாளர்களும் சட்டப்பூர்வமாக தங்களது பாலினத்தை மாற்றிக் கொள்ள வேண்டுமெனில் அதற்கு 140 பவுண்ட் வரை செலவிட நேர்ந்தது. இந்த தொகையை குறைக்கக் கோரி பலகட்ட போராட்டங்களை அவர்கள் முன்னெடுத்தனர். இதையேற்று 5 பவுண்டாக கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டணக் குறைப்பு திருநங்கைகளுக்கான தடைகளைக் களையும் என பெண்கள் மற்றும் பாலின சமத்துவ துறை அமைச்சர் லீஸ் ட்ரஸ் தெரிவித்தார்.

பிரிட்டனில் 2 லட்சம் முதல் 5 லட்சம் வரை திருநங்கைகள் வசிப்பதாகவும், இதில் 5871 பேரிடம் மட்டுமே பாலின அங்கீகார சான்றிதழ் இருப்பதாகவும் அரசின் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

Add your comment

Your email address will not be published.

nineteen − 13 =