ஓரினச்சேர்க்கை தம்பதி ரத்தம் தானம் செய்ய கட்டுப்பாடுகள்

வேல்ஸ் மாகாணத்தில் ஆண்களுடன் தொடர்பில் இருக்கும் ஆண்கள், ரத்தம் தானம் செய்வதற்கு முன்பாக 3 மாதம் காத்திருக்க வேண்டும். இந்த விதிமுறை மாற்றப்பட்டு திங்கள்கிழமை முதல் செக்சில் ஆக்டிவாக இருக்கும் ஓரினச்சேர்க்கை ஆண்கள், முதன்முறையாக ரத்த தானம் செய்ய அனுமதியளிக்கப்படுகிறது. அதேவேளையில், ஒரே பாலினத்துடனோ அல்லது இருபாலினத்துடனோ உடலுறவு வைத்துக் கொள்ளும் நபர்கள், பாலின பாகுபாடின்றி, ரத்த தானம் செய்வதற்கு முன்பாக 3 மாதம் காத்திருப்பது அவசியம். இதன்காரணமாக வேல்ஸ் மாகாணத்தில் ஓரினச்சேர்க்கையாளர் ஆண் தம்பதி, ரத்தம் தானம் செய்ய முன்வந்தபோது அதை ஏற்க மறுத்த ரத்த வங்கி, 3 மாதம் உடலுறவில் ஈடுபடாமல் காத்திருக்க வேண்டுமென அறிவுறுத்தியது.

Add your comment

Your email address will not be published.

14 − two =