அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து

2 வயது குழந்தை பலி

இங்கிலாந்தின் லான்க்ஸ் ஹேஷாம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்கள் டார்ரென் (44) மற்றும் ஷாரோன் (50) தம்பதி. இவர்களது வீட்டில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கியாஸ் கசிந்ததால், திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து பக்கத்து வீடுகளுக்கும் தீ பரவி, பயங்கர சப்தத்துடன் கியாஸ் சிலிண்டர் வெடித்தது. இந்த கோர விபத்தில் டார்ரென்- ஷாரோன் தம்பதி படுகாயம் அடைந்தனர்.

பக்கத்து வீட்டில் வசிக்கும் ஸ்டீபன் (41), விக்கி (42) தம்பதியின் 2 வயது மகன் ஜார்ஜ் ஹின்ட்ஸ் பரிதாபமாக உயிரிழந்தான். இந்த விபத்து குறித்து உள்ளூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Add your comment

Your email address will not be published.

15 − 10 =