100 நாளில் கரோனா தடுப்பூசி

உலக தலைவர்கள் திட்டம்

கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான், இத்தாலி, பிரிட்டன், அமெரிக்க ஆகிய பணக்கார நாடுகளை கொண்ட ஜி7 அமைப்பின் மாநாடு இங்கிலாந்தின் கார்ன்வால் கடற்கரையில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. 3 நாள்கள் நடைபெறும் மாநாட்டை தொடங்கிவைத்த பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், 2008ஆம் ஆண்டில் நிலவிய நிதி நெருக்கடியில் இருந்து பாடம் கற்பதும், பொருளாதார சமத்துவமின்மையை எதிர்கொள்வதும் அவசியம் என்று பேசினார். இதைத்தொடர்ந்து, இளவரசி இரண்டாம் எலிசெபத்தை ஜி7 தலைவர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்து, அவருடன் இரவு உணவை அருந்தி, குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
இன்று (சனிக்கிழமை) இரண்டாம் நாள் மாநாடு நடைபெறுகிறது. இதில், ஜி7 நாடுகளின் அனைத்து வளங்களையும் பயன்படுத்தி, கரோனா போன்ற பெருந்தொற்றை இனி உலகம் சந்திக்க விடக் கூடாது என தலைவர்கள் உறுதியேற்கின்றனர். அதுமட்டுமன்றி கரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகளுக்கு 100 நாள்களில் அனைத்து பரிசோதனைகளையும் நிறைவுசெய்து அனுமதி அளிப்பது அவசியம் எனவும் தலைவர்கள் அறிவிக்க முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Add your comment

Your email address will not be published.

1 × two =