இங்கிலாந்தில் இறுதிச்சடங்கில் பங்கேற்க கட்டுப்பாடுகள் நீக்கம்

 

இங்கிலாந்தில் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்கான கட்டுப்பாடுகள் யாவும் மே 17ஆம் தேதி முதல் முழுமையாக நீக்கப்படுகின்றன. இதனால், வரையறையின்றி எத்தனை பேர் வேண்டுமானாலும் பங்கேற்பதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது.

 

தற்போது கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இறுதிச்சடங்கில் 30 பேர் வரை மட்டுமே பங்கேற்க வேண்டும் என்கிற கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருக்கும் நிலையில், இந்தத் தடை விலக்கப்படுகிறது. இதேபோல், திருமண நிகழ்ச்சிகளில் மே 17ஆம் தேதியிலிருந்து 30 பேர் வரை பங்கேற்க அனுமதி அளிக்கப்படுகிறது. ஜூன் மாதத்தில் இந்தத் தடை விலக்கப்பட்டு இதிலும் கட்டுப்பாடின்றி எத்தனை பேர் வரையிலும் பங்கேற்கலாம் என அனுமதி அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இங்கிலாந்தில் திருமண நிகழ்ச்சிகளில் 15 பேர் வரை மட்டுமே பங்கேற்க முடியும்.

இதுகுறித்து கம்யூனிட்டி செயலாளர் ராபர்ட் ஜென்ரிக் கூறுகையில், கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக மத தலைவர்களிடமும், இறுதிச்சடங்கை ஏற்பாடு செய்யும் அமைப்பினரிடமும் ஆலோசனை நடத்தி புதிய வழிமுறைகள் வெளியிடப்படும் என்றார்.

 

இங்கிலாந்தில் இளவரசர் பிலிப் மறைவின்போது கூட 30 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர். அவரது மனைவியும், இளவரசியுமான இரண்டாம் எலிசெபத் அப்போது தனிமையில் அமர்த்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

பிரிட்டனை பொறுத்தமட்டில் ஸ்காட்லாந்தில் தற்போது 50 பேர் வரை இறுதிச்சடங்கில் பங்கேற்கலாம். இந்த எண்ணிக்கை 100 ஆக ஜூன் 7 முதல் நீட்டிக்கப்படுகிறது.

Add your comment

Your email address will not be published.

5 × four =