ஜெர்சிக்கு ஆயுதம் தாங்கிய கப்பலை அனுப்பிவைத்தார் பிரான்ஸ் அதிபர்

 

 

பிரிட்டனின் ஆளுகைக்கு உட்பட்ட ஜெர்சி தீவில் மீன்பிடிக்கும் பிரான்ஸ் நாட்டு மீனவர்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்து ஜெர்சி அரசு அறிவிக்கை வெளியிட்டிருக்கிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜெர்சி துறைமுக வழித்தடத்தை மறித்து 70க்கும் மேற்பட்ட படகுகள் வாயிலாக மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நிலைமையை உன்னிப்பாக கண்காணிக்கும் வகையில், பிரிட்டன் கடற்படைக்குச் சொந்தமான இரண்டு கப்பல்கள் அங்கு நிலைநிறுத்தப்பட்டிருக்கின்றன.

 

இதனால், ஜெர்சியில் பதற்றம் நிலவுகிறது. பரபரப்பான இந்தச் சூழலில், துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதம் தாங்கிய கடற்படை கப்பலை பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் சம்பவ இடத்துக்கு அனுப்பியிருக்கிறார். பழிக்கு பழி என்ற அடிப்படையில் அவர் இந்த முடிவை எடுத்ததாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

இதுபற்றி பிரான்சின் ஐரோப்பிய விவகாரங்கள் துறை அமைச்சர் கிளமென்ட் பாவ்னி கூறுகையில், பிரிட்டனின் படைக் காட்சியால் எங்கள் அரசை அச்சுறுத்த முடியாது என்றார்.

Add your comment

Your email address will not be published.

eleven − one =