பிரிட்டனில் அடுத்தகட்ட பொதுமுடக்க தளர்வு தாமதமாகலாம்

 

பிரிட்டனில் இந்தியவகை கரோனா பரவல் காரணமாக ஜூன் 21இல் நடைமுறைக்கு வருவதாக இருந்த அடுத்தகட்ட தளர்வுகள் தாமதமாகலாம் என்றும், உள்ளூர் அளவில் பொதுமுடக்கம் கடுமையாக அமல்படுத்தப்படலாம் என்றும் கேபினெட் அமைச்சர் ஒருவர் தெரிவித்தார்.
இதனிடையே, லண்டனில் தடுப்பூசி முகாமை செவ்வாய்க்கிழமை பார்வையிட்ட பிரதமர் போரிஸ் ஜான்சன் செய்தியாளர்களிடம் பேசுகையில், “”தடுப்பூசி செலுத்துவதற்கான அழைப்பு வரும்போது, பொதுமக்கள் அதை தவறாது பெற்றுக் கொள்ள வேண்டும். வைரஸ் தாக்கத்திலிருந்து பொதுமக்களை காப்பதற்கான சிறந்த வழி தடுப்பூசிகள் மட்டும்தான். ஏற்கெனவே, லட்சக்கணக்கான உயிர்களை தடுப்பூசிகள் காத்திருக்கின்றன; இன்னமும் காக்கும்” என்றார்.
தற்போது பிரிட்டனில் 37 வயதினருக்கு தடுப்பூசிகள் செலுத்துவதற்கான அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது. மக்களிடம் குறிப்பாக குழந்தைகளிடம் கரோனா பரவல் திடீரென அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு சுற்றுச்சூழல் துறை செயலாளர் ஜார்ஜ் யூஸ்டிஸ் கூறுகையில், ஜூன் 21இல் நடைமுறைக்கு வருவதாக இருந்த பொதுமுடக்க தளர்வுகளை முன்னெடுத்துச் செல்ல அமைச்சர்கள் விரும்புகின்றனர். ஆனால், இதில் தாமதம் ஏற்படுவதையும் நிராகரிக்க முடியாது என்றார்

Add your comment

Your email address will not be published.

2 × 3 =