விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் இனிப்பக உரிமையாளர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் நான்கு பேர் கைது. தகாத உறவை தட்டிக் கேட்டதால் மனைவி நண்பர்களை வைத்து கொலை செய்த சம்பவம்
ராஜபாளையத்தை சேர்ந்தவர் சிவக்குமார். இவர் பழைய பேருந்து நிலையம் எதிரே இனிப்பகம் நடத்தி வருகிறார். தற்போது இவர் தனது குடும்பத்துடன் சென்னையில் வசித்து வருகிறார். தீபாவளிக்கு சொந்த ஊருக்கு வந்த இவர் தனது மனைவி காளீஸ்வரி மற்றும் மகன் ஐந்து வயதான குரு சக்தியை அழைத்துக் கொண்டு தெற்கு வெங்காநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட குப்பைமேடு பகுதியில் உள்ள தனது சொந்த நிலத்தை பார்வையிடுவதற்காக சென்று உள்ளார்.
அப்போது இவரது இடத்தின் அருகே நான்கு பேர் மது அருந்திக் கொண்டிருந்ததாக தெரிகிறது அவர்களை சத்தம் போட்டு விரட்டி அடித்ததாகவும் வீடு திரும்பி கொண்டிருந்தபோது இவரை வழிமறித்த அடையாளம் தெரியாத நான்கு பேர் இருசக்கர வாகனத்தில் இருந்து இவரை கீழே தள்ளி உள்ளதாகவும் அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்த இவரை அந்த கும்பல், மனைவி கண் முன்னே தலை கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியதாகவும் அவரது மனைவி அளித்த தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு சென்ற தெற்கு காவல் துறையினர் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் முன்விரோதம் காரணமாக கொலை நடந்ததா அல்லது மது அருந்தியதை தட்டி கேட்டதற்காக ஆத்திரமடைந்த கும்பல் குடிபோதையில் இவரை கொலை செய்தனரா என பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தனிப்படை அமைத்து காவல்துறை விசாரணை நடத்தியதில் சிவக்குமார் மனைவி காளீஸ்வரிக்கும் யோகா பயிற்சியாளர் ஐயப்பனுக்கும் இடையே திருமணத்தை மீறிய உறவு இருந்ததாகவும் இதனை சிவக்குமார் கண்டித்ததாகவும் தெரிகிறது. இதனால் ஐயப்பருடன் சேர்ந்து நண்பர்களன விக்னேஷ், மருது பாண்டி வைத்து கொலை செய்ததாகவும் காளீஸ்வரி தெரிவித்துள்ளார். இதன் காரணமாக நான்கு பேரை கைது செய்து காவல் துறை விசாரணை நடத்தி வருகிறார்கள். தகாத உறவுக்கு இடையூறாக இருந்த கணவனை மனைவியே கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.