டெல்லியில் வெளிநாட்டு தூதரகங்களில் கரோனா பாதிப்பு உச்சம்

 

காங்கிரஸ் உதவி

 

கரோனா இரண்டாம் அலையால் டெல்லியில் அமைந்துள்ள வெளிநாட்டு தூதரக தூதர்களும், அவர்களது குடும்பத்தினரும் கடுமையான பாதிப்பை சந்தித்து வருகின்றனர். பிலிப்பைன்ஸ் நாட்டு தூதர், உதவிக்காக காங்கிரஸ் இளைஞர் அணியை சனிக்கிழமை தொடர்புகொண்டதன் வாயிலாக இந்த பிரச்னை பூதாகரமாக வெடித்தது.

 

இதேபோல், கரோனா பாதிப்புக்குள்ளான நியூஸிலாந்து உள்ளிட்ட தூதரக ஊழியர்களும் காங்கிரஸ் கட்சியிடம் ஞாயிற்றுக்கிழமை காலை சமூக வலைதளம் வாயிலாக உதவி கோரினர். டெல்லியில் நிலவும் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக இந்த முடிவை வெளிநாட்டு தூதரக பணியாளர்கள் மேற்கொண்டனர். இதனால், மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கும், காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் ஜெய்ராம் ரமேசுக்கும் இடையே சமூக வலைதளத்தில் பனிப்போர் ஏற்பட்டது. இருவரும் ஒருவரையொருவர் கடுமையான வார்த்தைகளால் சாடினர். இதனால், நியூலாந்து உயர் ஆணையர் சமூக வலைதளத்தில் பதிவிட்ட பதிவை நீக்கினார். இதனிடையே, அவரது வேண்டுகோளை ஏற்று ஏராளமான ஆக்சிஜன் சிலிண்டரை நியூஸிலாந்து உயர் ஆணையர் அலுவலகத்துக்கு காங்கிரஸ் நிர்வாகிகள் அடுத்த ஒருமணிநேரத்தில் எடுத்துச் சென்றனர்.

காங்கிரசின் இந்த செயல்பாட்டுக்கு கண்டனம் தெரிவித்த மத்திய வெளியுறவு அமைச்சர், டெல்லியில் ஏராளமான நபர்கள் தேவையில் இருக்கும்போது, காங்கிரஸ் கட்சியினர் இவ்வாறு ஆக்சிஜன் சிலிண்டர் விநியோகித்து மலிவான விளம்பரம் தேடுகின்றனர் என குறிப்பிட்டார்.

 

டெல்லி சாணக்யபுரியில்தான் பெரும்பாலான வெளிநாட்டு தூதரகங்கள் அமைந்துள்ளன. அதன் அருகிலேயே தூதர்களின் அதிகாரபூர்வ வீடுகளும் இருக்கின்றன. இதனால், அவர்களது குடும்பத்தினரும் கரோனா தொற்றுக்கு பாதிப்புக்குள்ளாக நேர்ந்தது. பிலிப்பைன்ஸ் தவிர தென் கிழக்கு ஆசிய நாடுகளின் தூதர்களும் கரோனா தொற்றுக்குள்ளாகினர்.

தாய்லாந்து தூதரக பணியாளர்களில் பெரும்பாலானோர், டெல்லியில் நிலவும் ஆக்சிஜன் மற்றும் ஐசியூ பற்றாக்குறை காரணமாக தங்கள் சொந்த நாட்டுக்கே இரண்டு நாள்களுக்கு முன்பு திரும்பினர்.

Add your comment

Your email address will not be published.

3 + 6 =