தெய்வங்களை வீட்டிற்குள் வர செய்ய இதை கட்டாயம் செய்யுங்கள்

நம் வீட்டில் தெய்வம் வாசம் செய்கிறதா தெய்வ சக்தி குடிகொண்டிருக்கிறது தெய்வ சக்தி இருந்தால் ஏன் இவ்வளவு பிரச்சனைகள் வருகிறது ஒரு வீட்டில் தெய்வ சக்தி இல்லை என்றால் அதற்கான காரணம் நாமே என்று வேறு யாரும் இல்லை நாம் முறையாக சிலவற்றை செய்ததின் விளைவாக தெய்வ அனுகிரகம் நம்மை விட்டு நீங்குகிறது.

சரி தெய்வங்களை நாம் எப்படி நம் வீட்டிற்கு அழைத்து அவர்களது அனுபவங்களை பெறலாம் என்பதை இந்த பதிவில் பார்ப்போம் தெய்வங்களை வீட்டிற்குள் அழைக்கும் உரிமை ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்கு அதிகமாக உண்டு.

பெண்கள் நினைத்தால் எதையும் சாதிக்கலாம் என்பதற்கு இதுவும் ஒன்று முப்பது ஆண்டுகளுக்கு முன்பு நம் வாழ்க்கை முறை முற்றிலும் மாறுபட்டு இருந்தது வாசலில் கோலம் இடுவது வழக்கம் இன்று பணத்தேவை காரணமாக பெண்களும் வேலைக்கு செல்ல வேண்டி இருக்கிறது.

அதனால் அவர்களால் ஆன்மீக ரீதியான பல செயல்களை செய்ய இயலுவதில்லை மிக முக்கியமான ஒன்று வாசலில் சாணம் தெளித்து கோலம் இடுவது வாசலில் சாணம் தெளித்து கோலம் இடுவது என்பது தெய்வங்களை இருப்பதற்கான ஒரு சூட்சமம் ஆகும்.

ஆனால் அதை நாம் தற்போது செய்வது கிடையாது இன்றைய சூழலில் அதை செய்வது கொஞ்சம் கடினம் தான் சரி அதை செய்ய முடியவில்லை என்றால் வேறு என்ன செய்யலாம்.

இறைவா நீங்கள் எங்கள் வீட்டிற்குள் வர வேண்டும் என்று நினைத்துக்கொண்டு வாசலில் மஞ்சள் தெளிக்கலாம் மஞ்சள் பூசி குங்குமம் வைப்பது அவசியம் இன்றைய காலத்தில் பலர் வாசற்படிகளில் மஞ்சள் பெயின்ட் அடித்து வைத்திருப்பதை நாம் பார்க்கிறோம்.

நிச்சயமாக அதனால் ஒரு பிரயோஜனமும் இல்லை ஆகையால் முடிந்தவரை வாசலில் கோலமிட்டு வாசற்படிகளில் மஞ்சள் பூசி குங்குமம் இடவேண்டும் இறைவனை வாசல் வரை அழைத்து ஆகிவிட்டது.

அடுத்து என்ன செய்யலாம் வீட்டில் தீபம் ஏற்றி நம் வீட்டில் குடிகொண்டுள்ள தெய்வங்களுக்கு மலர்களால் அர்ச்சனை செய்து நம்மால் முடிந்தவரை நிவேதனம் செய்ய வேண்டும் எதுவுமே இல்லை என்றால் வாழைப்பழம் இப்படி ஒரு 48 நாட்கள் தொடர்ந்து செய்து பாருங்கள் நிச்சயம் உங்கள் வீட்டில் தெய்வ சக்தி இருப்பதை உங்களால் உணர முடியும்.

1 comment

  • vreyro linomit 6 days ago

    Hi there, just became aware of your blog through Google, and found that it is really informative. I am gonna watch out for brussels. I will appreciate if you continue this in future. Numerous people will be benefited from your writing. Cheers!

    Reply

Add your comment

Your email address will not be published.

five × two =