இந்திய முக்கிய செய்திகள்…

* மத்திய அரசின் புதிய தகவல்தொழில்நுட்ப விதிகளை ஏற்க மறுத்ததால், இந்தியாவில் சட்டப் பாதுகாப்பை டுவிட்டர் நிறுவனம் இழந்தது. இதனால், சட்டவிரோதமான 3ஆம் நபர் டுவிட்டர் பதிவுகளுக்கு இந்திய தண்டனைச் சட்டத்தின்கீழ் டுவிட்டர் நிறுவனத்தின்மீது நடவடிக்கை எடுக்கக் கூடிய சூழல் உருவாகியுள்ளது.

* கோவிட் பாதிப்பால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமை செயலகத்தில் தொடங்கிவைத்தார். முதல்கட்டமாக 5 குழந்தைகளுக்கு அவரே ரூ.5 லட்சம் வைப்புத்தொகையை வழங்கினார்.

* லண்டன் ராயல் வேதியியல் கழக உறுப்பினர்களாக மதுரை தியாகராஜர் கல்லூரி பேராசிரியர்கள் பி. தர்மராஜ், பி. பிரகாஷ் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரின் வழிகாட்டுதலின்பேரிலும், தலா 14 பேர் இதுவரை முனைவர் பட்டம் பெற்றிருக்கின்றனர்.

* காலியாக உள்ள தமிழகத்துக்குகிய 3 ராஜ்யசபா எம்.பி. பதவிக்கான இடைத்தேர்தலை தனித்தனியாக நடத்த வேண்டுமெனக் கோரி, டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையத்திடம் திமுக எம்.பி.க்கள் டி.ஆர். பாலு, பி.வில்சன் ஆகியோர் மனு கொடுத்தனர்.

* ஐரோப்பிய நாடுகளின் அறிவியல் தொழில்நுட்ப மாநாடு விவாடெக் என்ற பெயரில், பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நேற்று நடைபெற்றது. அதில், காணொலி வாயிலாக பேசிய பிரதமர் மோடி, புத்தாக்கக் கண்டுபிடிப்பாளர்களும், முதலீட்டாளர்களும் இந்தியாவுக்கு தேவைப்படுகிறார்கள். சந்தை, மூலதனம் உள்பட 5 முக்கி துறைகளில் இந்தியாவில் முதலீடு செய்ய உலக நாடுகள் முன்வர வேண்டுமென அவர் அழைப்பு விடுத்தார்.

* கோவிஷீல்ட் தடுப்பூசி இரண்டாம் தவணைக்கான இடைவெளியை தடுப்பூசியின் செயல்திறன் மற்றும் புள்ளிவிவரங்களின் அடிப்படையில், மறுஆய்வு செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

* ஆசியான் நாடுகளின் பாதுகாப்புத் துறை அமைச்சர்கின் மாநாடு நேற்று நடைபெற்றது. இதில் பேசிய மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பயங்கரவாதத்தை எதிர்கொள்ள ஒருங்கிணைந்த அணுகுமுறை தேவை என மேற்கோள்காட்டினார்.

* நிகழ் கல்வியாண்டில் பாலிடெக்னிக், பிளஸ் 1 மாணவர் சேர்க்கைக்கு அடிப்படை ஆவணமாக அறிவிக்கப்பட்ட 9ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியலை தயார் செய்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக் கல்வி ஆணையர் நந்தகுமார் வெளியிட்டார்.

* சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஜூன் 3ஆம் தேதி நீலா என்ற பெண் சிங் கோவிட் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்த நிலையில், மேலும் ஒரு சிங்கம் நேற்று பலியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

* அரியலூர் மாவட்டத்தில் 10 ஹைட்ரோகார்பன் ஆய்வுக் கிணறுகளை அமைக்க அனுமதியளிக்க கோரி, மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்துக்கு ஓஎன்ஜிசி நிறுவனம் கடிதம் எழுதியது.

* கோவேக்சின் தடுப்பூசியில் கன்று ரத்தத்தின் திரவம் இருப்பதாக வெளியான புரளிக்கு மத்திய அரசு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது.

* தமிழ்நாட்டில் நேற்று 10,448 பேருக்கு கோவிட் தொற்று உறுதியானது. இது கடந்த 2 மாதங்களில் இல்லாத குறைந்தபட்ச பாதிப்பு ஆகும்.

* இந்தியாவில் கோவிட் இரண்டாம் அலையில் 730க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் பலியானதாக இந்திய மருத்துவர்கள் சங்கமான ஐஎம்ஏ தெரிவித்தது.

* இந்தியாவில் கோவிட் தொற்றுக்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை நேற்றைய நிலவரப்படி, 9 லட்சத்துக்கும் கீழாக அதாவது 8,65,432 ஆக குறைந்தது.

* இந்திய வம்சாவளியை சேர்ந்த சரளா வித்யா நாகலா, அமெரிக்காவின் கனெக்டிகட் மாகாண மாவட்ட நீதிபதியா நியமிக்கப்பட்டுள்ளார்.

Add your comment

Your email address will not be published.

14 + 1 =