சிவகாசியில் இளைஞர் கொல்லப்பட்ட விவகாரத்தில் ஐந்து பேர் கைது
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் இளைஞர் வெட்டிக் கொல்லப்பட்ட விவகாரத்தில் ஐந்து பேர் கைது செய்து காவல்துறையினர் நடவடிக்கை.
சிவகாசி அருகே உள்ள நமஸ்காரித்தான் பட்டியைச் சேர்ந்தவர் செல்வம். இவருக்கு 4 பிள்ளைகள் உள்ளனர். இவரது 3வது மகன் பொன்பாண்டி (23). சிவகாசியில் லோடுமேன் வேலை பார்த்து வந்துள்ளார். தீபாவளி பண்டிகையொட்டி வீட்டின் அருகே பட்டாசு வெடித்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகின்றது.
அப்போது அந்த வழியாக காளீஸ்வரி என்ற பெண், மாடுகளை பத்திக் கொண்டு வரும்போது மாடுகள் மிரண்டு ஓடியுள்ளது, அப்போது பட்டாசு போட்டுக்கொண்டிருந்த பொன்பாண்டியை, காளீஸ்வரி கண்டித்துள்ளார். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் நடைபெற்றுள்ளது.
அதனை தொடர்ந்து நமஸ்கரித்தான்பட்டி அருகே உள்ள தோட்டத்தில் பொன்பாண்டிக்கும் காளீஸ்வரியின் உறவினர்களுக்கும் வாக்குவாதம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த காளீஸ்வரி உறவினர்கள், பொன்பாண்டியை கோடாரியால் வெட்டி கொலை செய்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர்.
உடலை கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து நான்கு தனிப்படை அமைத்து குற்றவாளி தேடி வந்த நிலையில் வடமலாபுரம் பகுதி சேர்ந்த கார்த்தி, மாரிமுத்து, வீரபாண்டி, பால்ராஜ், அசோக் ஆகிய ஐந்து வரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.