திண்டிவனத்தில் ஆயுத பூஜையை முன்னிட்டு மாவட்ட அளவிலான முதலாம் ஆண்டு கால்பந்தாட்ட போட்டி.
ஒரு லட்சம் ரூபாய் பரிசு மற்றும் வெற்றிக்கோப்பை இ.என்.எஸ் சேகர் வழங்கினார்.
ஆயுத பூஜை முன்னிட்டு திண்டிவனத்தில் மாவட்ட அளவில் நடைபெற்ற முதலாம் ஆண்டு கால்பந்தாட்ட போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு மற்றும் வெற்றி கோப்பைகளை இஎன்எஸ் சேகர் வழங்கினார்.
திண்டிவனம் 2வது வார்டு அய்யந்தோப்பில் இ.என்.எஸ் பிரதர்ஸ் சார்பில் மாவட்ட அளவிலான ஐவர் கால்பந்தாட்ட போட்டி நடத்தப்பட்டது.
இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 56 அணியிகள் கலந்து கொண்டனர். இரண்டு நாட்களாக நடைபெற்ற போட்டியில், சென்னை ராயபுரம் அணி வெற்றிக் கோப்பையை தட்டி சென்றது. வெற்றி பெற்று முதல் பரிசு பெற்ற சென்னை ராயபுரம் அணிக்கு 50 ஆயிரம் ரூபாயும், இரண்டாவது பரிசு பெற்ற அய்யந்தோப்பு அணிக்கு 30 ஆயிரம் ரூபாயும், மூன்று மற்றும் நான்காம் இடம் பிடித்த விழுப்புரம் மற்றும் இஎன்எஸ் பிரதர்ஸ் அணியினருக்கு தல 10 ஆயிரம் ரூபாய் மற்றும் வெற்றி கோப்பைகளை ஈச்சரி ஊராட்சி மன்ற தலைவர் இஎன்எஸ் சேகர் வழங்கினார்.
அப்போது அவர் கூறுகையில் விழுப்புரம் மாவட்டத்தில் முதன்முறையாக கால்பந்தாட்ட போட்டி நடத்த வேண்டும் என இளைஞர்கள் கோரிக்கை வைத்ததால், தமிழக முழுவதும் மாவட்டங்களில் உள்ள கால்பந்தாட்ட வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் அனைவரும் ஒற்றுமையுடன் விளையாடி பெருமை சேர்த்துள்ளனர். இந்த போட்டி தமிழகம் மட்டும் இன்றி, மாநில அளவில் நடத்துவதற்கும் ஏற்பாடு செய்யப்படும் எனவும்,இளைஞர்கள் நினைத்தால் எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்பதற்கு இப்பகுதி இளைஞர்கள் ஒரு உதாரணம் என தெரிவித்தார். இதில் திண்டிவனம் 2வது வார்டு நகர மன்ற உறுப்பினர் திருமகள் செங்கேணி மற்றும் ஊர் பொதுமக்கள், விளையாட்டு வீரர்கள், இளைஞர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.