சமையல் கியாஸ் கசிந்து பயங்கர தீ விபத்து

 

லேன்காஷிரில் அடுக்குமாடி குடியிருப்பில் சமையல் கியாஸ் கசிந்து ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில், ஏராளமான வீட்டு உபயோக பொருள்கள் சேதமடைந்தன.

லேன்காஷிர் ஹேஷாம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை திடீரென சமையல் கியாஸ் கசிந்து பயங்கர சப்தத்துடன் தீ விபத்து ஏற்பட்டது. இதனால், அண்டை வீடுகளுக்கும் தீ பரவி, அந்த அடுக்குமாடி குடியிருப்பே கரும்புகை மண்டலமாக காட்சியளித்தது. தகவல் அறிந்த தீயணைப்பு படையினர், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

உள்ளூர் காவல் துறையினரும் அங்கு வந்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆம்புலன்ஸ் வாகனங்களும் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இந்த விபத்தில், உயிரிழப்பு ஏற்பட்டதற்கான தகவல் ஏதும் வெளியாகவில்லை. பாதுகாப்பு கருதி, அப்பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிக்கும் பொதுமக்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.

தீயை அணைக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருவதால், லேன்காஷிர் பகுதிக்கு செல்வதை தவிர்க்குமாறு பொதுமக்களை தீயணைப்புத் துறையினர் அறிவுறுத்தினர்.

Add your comment

Your email address will not be published.

19 − sixteen =