சட்ட வடிவம் பெறுகிறது தீ பாதுகாப்பு மசோதா

 

அடுக்குமாடி குடியிருப்புகளில் தீ விபத்து ஏற்படும்பட்சத்தில் அதற்கான செலவை யார் மேற்கொள்வது என்பதை தீர்மானிக்கும் மசோதா, பாராளுமன்றத்தின் ஒப்புதலை பெற்று விரைவில் சட்டவடிவம் பெறுகிது.
இதற்காக தீ பாதுகாப்பு மசோதாவில் கொண்டுவரப்பட்ட திருத்தங்களை ஆதரித்து பாராளுமன்றத்தில் 242 உறுப்பினர்களும், எதிராக 153 எம்.பி.க்களும் வாக்களித்தனர். இதைத்தொடர்ந்து, அரச குடும்பத்தின் ஒப்புதலை பெறும்பட்சத்தில், இம்மசோதா முழுமையான சட்டவடிவம் பெறும்.
குடியிருப்புகளில் தீ பாதுகாப்பு நடைமுறைகளுக்கு குடியிருப்புவாசிகளை பொறுப்புடைமையாக்கும் முடிவுக்கு பாராளுமன்றத்தில் எம்.பி.க்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்ததால், பலகட்ட விவாதத்துக்குப் பிறகு இந்த மசோதா நிறைவேறியிருக்கிறது. வெஸ்ட் லண்டனில் கடந்த 2017ஆம் ஆண்டு நிகழ்ந்த தீ விபத்தில் 72 பேர் உடல் கருகி பலியானதைத்த தொடர்ந்து, தீத்தடுப்பு விதிமுறைகளை கடுமையாக்கும் நோக்கில் இந்த மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. நடப்பு பாராளுமன்றக் கூட்டத் தொடரிலேயே இந்த மசோதாவை நிறைவேற்றுவதில் பிரிட்டன் அரசு முனைப்புடன் செயல்பட்டுவந்த நிலையில், வியாழக்கிழமை அதை நிறைவேற்றி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Add your comment

Your email address will not be published.

nineteen + 14 =