கரோனாவுக்கு எதிரான போரை வலுவிழக்க செய்ய விரும்புகிறீர்களா?

 

சோனியா காந்திக்கு பாஜக கேள்வி

 

கரோனா சூழலை எதிர்கொள்ள மத்திய அரசு தவறிவிட்டதாக காங்கிரஸ் காரிய கமிட்டி திங்கள்கிழமை விமர்சித்திருந்தது. இந்தச் சூழலில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு 4 பக்க கடிதம் ஒன்றை பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா செவ்வாய்க்கிழமை அனுப்பினார். அதன் விவரம்;

கரோனா போரில் ஈடுபட்டிருக்கும் வீரர்களின் மன உறுதியை உங்கள் கருத்து சிதைத்துவிடும் என்பது உங்களுக்கு தெரியாதா? வேண்டுமென்றே கரோனாவுக்கு எதிரான போரை வலுவிழக்கச் செய்ய நீங்கள் விரும்புகிறீர்களா? நான் இந்தக் கடிதத்தை மிகவும் வேதனையுடன் எழுதுகிறேன்.

காங்கிரஸ் தலைவர்கள் குறிப்பாக அக்கட்சியை சேர்ந்த மாநில முதல்வர்கள் உள்ளிட்டோர் குழப்பத்தை விளைவிக்கின்றனர். இந்தியாவில் தயாரிக்கப்படும் தடுப்பூசிகள் குறித்து காங்கிரஸ் தலைவர்கள் கேலி பேசி, மக்களின் மனதில் சந்தேகங்களை எழுப்புகின்றனர். மாநிலங்களுக்கு முதல்கட்டமாக முன்னுரிமை அடிப்படையில் 16 கோடி கரோனா தடுப்பூசிகளை மத்திய அரசு விநியோகித்துவிட்டது. மேலும், ஏழைகளுக்கும், ஒடுக்கப்பட்டவர்களுக்கும் இலவசமாக கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்படும் என்றும் பாஜக ஆளும் மாநிலங்கள் உறுதியளித்திருக்கின்றன. இதுபோன்ற முடிவுகளை காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் செயல்படுத்த முடியுமா? என அந்தக் கடிதத்தில் நட்டா கேள்வி எழுப்பியிருக்கிறார்.

Add your comment

Your email address will not be published.

7 − 4 =