தாயின் கவனச்சிதறால் ஒரு குடும்பமே பலியான சோகம்

இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்ட்ஷிர் பகுதியில் கடந்த ஆண்டு அக்டோபர் 12ஆம் தேதி காரும், லாரியும் நேருக்கு நேர் மோதியதில், காரை ஓட்டிய சோ போவெல் (29), அவரது பிள்ளைகள் போபி (8), சிமியோன் (6), அமலியா (4) ஆகிய 4 பேரும் பலியாகினர். சோ போவெலின் கணவரும், 18 மாத குழந்தையும் உயிர்தப்பினர். தாயின் கவனச்சிதறல் காரணமாக இந்த கோர விபத்து நிகழ்ந்தாக நீதிமன்றத்தில் நீதித்துறை அதிகாரி தெரிவித்தார். இந்த வழக்கில் விரைவில் தீர்ப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Add your comment

Your email address will not be published.

20 − 11 =