நாணல் போல சட்டத்தை வளைத்த ஆஸ்திரிய அரசியல்வாதி

ஆஸ்திரியாவின் வலதுசாரி சுதந்திர கட்சி தலைவர் ஹெயின்ஸ் ஸ்டிராச். இவர் கடந்த 2019ஆம் ஆண்டில் துணை அதிபராக இருந்தபோது தனக்கு சொந்தமான மருத்துவமனைக்கு நிதி திரட்டும் பொருட்டு, அந்நாட்டு சட்டத்தை நாணல் போல வளைத்தார். இதற்காக நன்கொடைதாரர் ஒருவரிடம் அவர் பேசிய வீடியோ ஜெர்மனி செய்தி சேனல்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. இதைத்தொடர்ந்து, ஹெயின்ஸ் ஸ்டிராச் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. குற்றம் நிரூபணமானால், அவருக்கு 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பிருப்பதாக சட்ட நிபுணர்கள் தெரிவித்தனர்.

Add your comment

Your email address will not be published.

7 − 5 =