பிரிட்டனில் இனி பள்ளி மாணவர்கள் முகக் கவசம் அணிய தேவையில்லை!

 

 

பிரிட்டனில் இனி பள்ளி மாணவர்கள் முகக் கவசம் அணிய தேவையில்லை. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை பிரதமர் போரிஸ் ஜான்சன் திங்கள்கிழமை (மே 10) வெளியிடுகிறார்.

 

பிரிட்டனில் தற்போது பள்ளி மாணவர்கள் முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த விதியை தளர்த்துவதற்கான வழிமுறைளை பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் வகுத்து வருகின்றனர். அதன்படி மே 17 முதல் பள்ளிகளில் வகுப்பறைகளில் முகக் கவச கட்டுப்பாடு நீக்கப்படுகிறது. எனினும், பள்ளிகளின் தாழ்வாரங்களிலும், வழிபாட்டுக் கூடங்களிலும் மாணவர்கள் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டுமென பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

இதுதொடர்பாக பள்ளிக் கல்வித் துறை செயலாளர் கவின் வில்லியம்சன் கூறுகையில், பிரிட்டனில் கரோனா தொற்றின் தாக்கம் குறைந்து வருவதாலும், தடுப்பூசி திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருவதாலும், பள்ளி வகுப்பறைகளில் முகக் கவச கட்டுப்பாட்டை நீக்கிவிடலாம் என நாங்கள் முடிவு செய்திருக்கிறோம் என்றார்.

பள்ளிக் கல்வித்துறையின் இந்த முடிவுக்கு தேசிய கல்வி யூனியன் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

Add your comment

Your email address will not be published.

twenty − seven =