அதிகரிக்கும் வெப்பநிலை கலிஃபோர்னியாவில் அவசரநிலை பிரகடனம்

அமெரிக்காவின் தென்மேற்கு மாகாணங்களில் வெப்பநிலை அதிகரித்து வருவதால், மின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண கலிஃபோர்னியா மாகாணத்தில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அரிசோனா, கலிஃபோர்னியா, நெவடா, உட்டா போன்ற பகுதிகளில் அடுத்த வாரம் ஞாயிற்றுக்கிழமை வரை அவசரநிலை அமல்படுத்தப்பட்டிருக்கிறது. வெப்பம் அதிகரித்து வருவதால், குளிரூட்டப்பட்ட அறையில் பொதுமக்கள் இருக்குமாறு அறிவுறுத்திய கலிஃபோர்னியா கவர்னர், இந்தக் காலகட்டத்தில் வெப்பநிலை 100 முதல் 110 பாரன்ஹீட் வரை இருக்கும் என்றும் தெரிவித்தார்.

Add your comment

Your email address will not be published.

9 + 13 =