புதியவகை தொற்றை எதிர்கொள்ள கூடுதல் முதலீடு

 

பிரிட்டன் அரசு முடிவு

 

உருமாறும் புதிய வகை கரோனா தொற்றை எதிர்கொள்வதற்கு ஏதுவாக தடுப்பூசி திட்டத்தை துரிதப்படுத்தும் வகையில், அதில் கூடுதல் முதலீடு செய்யப்படும் என பிரிட்டன் அரசு தெரிவித்துள்ளது.

 

தற்போது நடைமுறைப்படுத்தப்படும் தடுப்பூசிகள் தென் ஆப்பிரிக்கா மற்றும் கேண்ட் ஆகிய நாடுகளில் உருமாறி, பிரிட்டனில் பரவும் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதில் திறம்பட செயல்புரிகின்ற போதிலும், உருமாறும் வைரûஸ எதிர்கொள்ள நாம் விழிப்புடன் செயல்பட வேண்டுமென நிபுணர்கள் ஆலோசனை தெரிவித்தனர். மேலும், எதிர்காலத்தில் உருமாறும் தொற்று, இந்த தடுப்பூசிகளை எதிர்த்து செயல்படும் திறன் வாய்ந்தது என்று நிபுணர்கள் கவலை தெரிவித்தனர்.

 

எனவே போர்டன் டவுனில் உள்ள ஆய்வகத்தில் நடைபெற்றுவரும் கரோனா தொற்று தொடர்பான ஆய்வை ஊக்குவிப்பதற்காகவும், தடுப்பூசி திட்டத்தை துரிதப்படுத்துவதற்காகவும் 29.3 மில்லியன் பவுண்டை ஒதுக்கீடு செய்ய பிரிட்டன் அரசு முடிவு செய்துள்ளது. முன்னதாக 19.7 மில்லியன் பவுண்ட் ஒதுக்கீடு செய்ய முடிவெடுத்த நிலையில், தற்போது அந்தத் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் கரோனா நோய்த்தொற்றுக்கு எதிராக தடுப்பூசிகளால் உருவாக்கப்பட்ட நோய் எதிர்ப்பு சக்தியை அளவிடும் வகையில், வாரத்துக்கு 3000 ரத்த மாதிரிகளை விஞ்ஞானிகள் பரிசோதிக்க முடியும்.

Add your comment

Your email address will not be published.

17 − 8 =