in ,

பிரிட்டன் தமிழ் ஐரோப்பிய செய்திகள் | Britain Tamil Europe News UK News


Watch – YouTube Click

பிரிட்டன் தமிழ் ஐரோப்பிய செய்திகள்

 

பிரதமர் ரிஷி சுனக் எனக்கு துரோகம் செய்துவிட்டார் சுவேல்லா பிராவேர் மேன் பரபரப்பு குற்றச்சாட்டு

பிரிட்டன் உள்துறை அமைச்சராக பதவி வகித்த இந்திய வம்சவழியைச் சேர்ந்த
சுவேல்லா பிராவேர் மேன் நேற்று முன்தினம் தனது பதவியை ராஜினாமா செய்ய நேர்ந்தது. பாலஸ்தீன போராட்டம் குறித்து அவர் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததால் பதவியை இழந்தார்.

ஆரம்பத்தில் சுவேல்லா பிராவேர் மேனுக்கு ஆதரவாக பிரதமர் ரிஷி சுனக் செயல்பட்டார். பின்னர் நிலைமை கையை மீறி போனதால் சுவேல்லா பிராவேர் மேனை பிரதமர் கைவிட்டார்.

இந்தச் சூழ்நிலையில் தனக்கு பிரதமர் ரிஷி சுனக் துரோகம் செய்து விட்டதாக குற்றம் சாட்டை முன்வைத்து அவருக்கு சுவேல்லா பிராவேர் மேன் பரபரப்பு கடிதம் ஒன்றை இன்று அனுப்பினார்.

பிரிட்டனின் பண வீக்கம் சரிவு

பிரிட்டனில் கடந்த அக்டோபரில் மின் கட்டணம் ஓரளவு குறைந்ததால் பணவீக்கம் சரிவை சந்தித்தது. அதன்படி அக்டோபரில் 4.6 சதவீதமாக பணவீக்கம் பதிவானது. இது கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிவை சந்தித்திருக்கிறது. இதுவே அதற்கு முந்தைய செப்டம்பர் மாத த்தில் 6.7 சதவீதமாக பணவீக்கம் பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

காசா விவகாரம் குறித்து வாக்கெடுப்பு எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தல்

இங்கிலாந்தின் எதிர்கட்சித் தலைவர் ஸ்டார்மர் காசா போர் குறித்து சமீபத்தில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார்.
இதற்காக அவரை லேபர் கட்சியில் மூத்த தலைவர்கள் சாதிக் கான், ஆண்டி பண்ஹாம் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் ஸ்டார்மறை எதிர்க்கட்சி தலைவர பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என்றும் அவர்கள் குரல் கொடுத்தனர். அதேசமயம் கட்சியில் ஒரு சில எம்பிக்கள் ஸ்டார்மருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஸ்டார்மர் எதிர்க்கட்சி தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டும் என லேபர் கட்சியை சேர்ந்த பர்னிலே கவுன்சில் தலைவர் அன்வர் மற்றும் பென்டில்வாரோ கவுன்சில் தலைவர் அஜ்ஜத் முகமது ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த நிலையில் ஸ்டார்மரின் இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து
பர்ன்லே கவுன்சில் தலைவர் மற்றும் 10 கவுன்சிலர்கள் லேபர் கட்சியிலிருந்து விலகினர். இது அந்தக் கட்சி தலைமைக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சூழ்நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாமருக்கு எதிர்ப்பு தெரிவித்து லேபர் கட்சியில் இருந்து அதன் மூத்த தலைவரும் நிழல் அமைச்சருமான இம்ரான் ஹுசைன் பதவியை ராஜினாமா செய்தார்.

இந்த நிலையில் காசா விவகாரம் குறித்து கட்சிக்குள்ளையே வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என எதிர்க்கட்சி தலைவரும் லேபர் கட்சியின் தலைவருமான ஸ்டார்மார் வலியுறுத்தி உள்ளார்.

இங்கிலாந்தில் கர்ப்பப்பை வாய் புற்று நோயை 2040 ஆம் ஆண்டுக்குள் ஒழிக்க முடிவு

இங்கிலாந்தில் கர்ப்பப்பை வாய் புற்று நோயால் ஏராளமான பெண்கள் ஆண்டுதோறும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்தப் புற்றுநோயை கடைசி நேரத்தில் கண்டறிவதால் அதில் பெரும்பாலான பெண்கள் உயிரிழக்க நேரிடுகிறது.

எனவே இந்த புற்றுநோயை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்து சிகிச்சை அளிக்க பிரிட்டன் தேசிய சுகாதார துறை முடிவு செய்திருக்கிறது. அதற்கான நடவடிக்கைகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

இந்தச் சூழ்நிலையில் கர்ப்பப்பை வாய் புற்று நோயை வரும் 2040 ஆம் ஆண்டுக்குள் பிரிட்டனிலிருந்து ஒழிக்க முடிவை செய்திருப்பதாக தேசிய சுகாதார துறை தலைமை இயக்குனர் அமன்டா பிக்சர்ட் தெரிவித்துள்ளார்.

துணை கலெக்டரை கொலை செய்த வழக்கில் இளைஞர் கைது

சவுத் லண்டனில் துணை கலெக்டராக வேலை பார்த்து வந்த சுமார் 25 வயது மதிக்கத்தக்க இளைஞர் கலந்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கொலை செய்யப்பட்டார்.

அவரை கொலை செய்ததாக கிரிஸ்டன் என்ற 27 வயது மதிக்கத்தக்க வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவர் மீது கொலை குற்றச்சாட்டின் கீழ் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு வருகிறது. நீதிமன்றத்தில் விரைவில் அவருக்கு தண்டனை அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இங்கிலாந்தில் இளம் பைலட்டாக 17 வயது சிறுவன் தேர்வு

இங்கிலாந்தின் இளம் பைலட்டாக 17 வயது மதிக்கத்தக்க சிறுவன் மில்லோ என்பவர் தேர்வு ஆகியுள்ளார். சிறுவயதில் இருந்து விமான படிப்பில் மிகுந்த ஆர்வம் கொண்ட இவர் வானத்தில் விமானம் பறந்தாலே வெளியில் சென்று அதை வேடிக்கை பார்ப்பதை வாடிக்கையாகக் கொண்டிருந்தவர்.

மேலும் விமானி படிப்பதற்கான படிப்புகளை தன்னுடைய 14 வது வயதிலேயே இவர் படிக்கத் தொடங்கினார். இதன் விளைவாக பிரிட்டனின் இள வயது 18 என்ற பெருமையை மிலோ பெற்றுள்ளார்.

அக்டோபர் 31ஆம் தேதி அவரது பிறந்த தினத்தன்று பைலட் படிப்புக்கான சான்றிதழ் அவருக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பின்லாந்தில் சட்டவிரோதமாக குடியேறும் ரஷ்யர்கள்

பின்லாந்தில் ரஷ்ய மக்கள் சட்ட விரோதமாக குடியேறுவதாக அந்நாட்டு பிரதமர் குற்றம் சாட்டியுள்ளார். மிகச் சிறிய நாடான பின்லாந்தில் ரஷியர்கள் சட்டவிரோதமாக குடியேறி ஆக்கிரமிப்பதாக குற்றச்சாட்டை அவர் முன் வைத்திருக்கிறார்.

ஐரோப்பிய நாடுகளிலேயே ரஷ்யா உடன் பின்லாந்து தான் அதிகபட்ஷமாக 1340 கிலோமீட்டர் தூரத்திற்கு எல்லையை பகிர்ந்து கொள்வது என்பது கூடுதல் தகவலாகும்.


Watch – YouTube Click

What do you think?

திக் திக்கை ஏற்படுத்தி இன்று இரவு எபிசோட், ஆண்டவர் பத்த வைத்த நெருப்பு பத்திக்கிச்சி

நான் ஒரு படம் எடுக்க விடமாட்டிங்களா..கண்டிஷனுக்கு மேல கண்டிஷன் போட்டு கொல்றாங்களே… டா சாமி