ஐரோப்பிய யூனியனை வாட்டி வதைக்கிறது டெல்டா தொற்று

ஐரோப்பிய யூனியன் நாடுகளை இந்தியாவில் முதன்முதலில் உருமாறிய டெல்டா வகை கோவிட் தொற்று வாட்டி வதைப்பதாக ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மேர்கெல் தெரிவித்திருக்கிறார். வரும் ஆகஸ்ட் மாதத்தில், கோவிட் தொற்று பாதிப்பில் 90 சதவீதத்துக்கு டெல்டா தொற்றுதான் காரணமாக இருக்கும் என ஐரோப்பிய யூனியன் சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்திருந்தனர். இதன்மூலம் ஐரோப்பிய கண்டத்தில் கட்டுப்பாடுகளை தளர்த்துவதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. ஏற்கெவே ஐரோப்பிய நாடுகள் இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஆல்பா வகை தொற்றால் ஆட்டம் கண்ட நிலையில், தற்போது டெல்டா தொற்றும் அதன் பங்குக்கு வேலையை காட்ட ஆரம்பத்திருக்கிறது. இது 40 முதல் 60 சதவீதம் வரை பரவும்தன்மை வாய்ந்தது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Add your comment

Your email address will not be published.

twelve − 1 =