யூரோ அரை இறுதி போட்டியை காண பிரிட்டன் மக்களுக்கு வாய்ப்பு

யூரோ 2020 கால்பந்து போட்டியில் ஜெர்மனியை வெற்றி கொண்ட இங்கிலாந்து அணி, வரும் சனிக்கிழமை உக்ரைனை அரை இறுதி போட்டியில் சந்திக்கிறது. இத்தாலியின் ரோம் நகரின் ஸ்டேடியோ ஒலிம்பிகோ மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியை 16 ஆயிரம் பேர் நேரடியாக கண்டுகளிக்கின்றனர். இதில் 16 சதவீத இருக்கைகள் அதாவது 2,560 டிக்கெட்டுகள் ஐரோப்பிய யூனியனில் வாழும் பிரிட்டன் குடிமக்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கின்றன.

இருடோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களும், கோவிட் பாதிப்பு இல்லாதவர்களும் போட்டியை நேரடியாக கண்டுகளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Add your comment

Your email address will not be published.

20 + twelve =