யூரோ 2020 இறுதி போட்டியை காண 60 ஆயிரம் பேருக்கு அனுமதி

மைதானத்தின் 75% இருக்கைகள் நிரம்புகின்றன

இங்கிலாந்தின் வெம்பிளி மைதானத்தில் நடைபெறவுள்ள யூரோ 2020 அரையிறுதி மற்றும் இறுதி போட்டியை காண 60 ஆயிரம் பேருக்கு அனுமதியளிக்கப்படவுள்ளது. இதன்மூலம் மைதானத்தின் 75 சதவீத இருக்கைகள் நிரம்புகின்றன. பிரிட்டனில் கோவிட் தொற்று ஆரம்பித்து 15 மாதங்கள் கழித்து அதிக எண்ணிக்கையிலான நபர்கள் கூடும் முதல் விளையாட்டு போட்டி இதுவே ஆகும். ஏற்கெனவே யூரோ 2020 போட்டியின் தொடக்கத்தில் 22,500 பேர் வரை வெம்பிளி மைதானத்தில் கூட அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை 60 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டிருக்கிறது.

Add your comment

Your email address will not be published.

4 × 5 =