பிரெக்ஸிட்; ஐரோப்பிய யூனியன் குடிமக்களுக்கு 28 நாள் கெடு

கடந்த 2016ஆம் ஆண்டு பிரெக்ஸிட் வாக்கெடுப்புக்கு பின், பிரிட்டனில் வசிக்கும் ஐரோப்பிய யூனியன் குடிமக்களுக்கு நிரந்தர குடியுரிமைக்கு நிகரான அந்தஸ்து வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இது பிரிட்டன் மக்களுக்கு நிகரான வசிப்பிட உரிமை, பயணம், வேலைவாய்ப்பு, சுகாதார வசதி உள்ளிட்ட உரிமைகளை ஐரோப்பிய யூனியன் நாடுகளை சேர்ந்த மக்களுக்கு வழங்குகிறது. இதுவரை இதற்கான உரிமையை பெறுவதற்காக பல லட்சம் பேர் விண்ணப்பித்திருக்கின்றனர். அதிகபட்சமாக 9,75,000 போலந்து நாட்டினரும், 9,18,000 ரோமானிய நாட்டினரும் விண்ணப்பித்திருக்கின்றனர். இந்நிலையில், விண்ணப்பிப்பதற்கான கால வரையறையை 28 நாள்கள் நீட்டித்து, குடியேற்ற அமலாக்க துறை அதிகாரிகள் கெடு விதித்திருக்கின்றனர்.

Add your comment

Your email address will not be published.

15 − five =