அஸ்ட்ராஜெனிகா வழக்கில் ஐரோப்பிய யூனியனுக்கு பின்னடைவு

ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்கு இங்கிலாந்து- ஸ்வீடன் நாட்டின் கூட்டு மருந்து தயாரிப்பு நிறுவனமான ஆக்ஸ்போர்ட்- அஸ்ட்ராஜெனிகா நிறுவனம், ஜூன் இறுதிக்குள் 30 கோடி தடுப்பூசிகளை தருவதாக ஒப்பந்தம் செய்திருந்தது. ஆனால், இதில் காலதாமதம் ஆனதால், அஸ்ட்ராஜெனிகா நிறுவனத்தின் மீது புரூஷெல்ஸ் நீதிமன்றத்தில் ஐரோப்பிய யூனியன் வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, ஜூன் இறுதிக்குள் தடுப்பூசிகளை விநியோகிக்குமாறு மருந்து நிறுவனத்துக்கு உத்தரவிட முடியாது எனக் கூறியதுடன், கோடைக்காலத்துக்குள் ஒப்பந்தப்படி மருந்துகளை விநியோகிக்குமாறு உத்தரவிட்டனர். இல்லையெனில், அபராதம் விதிக்கப்படும் என அஸ்ட்ராஜெனிகா நிறுவனத்துக்கு எச்சரிக்கை விடுத்தனர்.

Add your comment

Your email address will not be published.

14 − ten =