எத்தியோப்பியாவில் வரலாறு காணாத பஞ்சம்

 

ஆப்பிரிக்க கண்டத்தின் எத்தியோப்பியா நாட்டின் திக்ரே பிராந்தியத்தில் கடந்த 8 மாதங்களாக உள்நாட்டுப் போர் மூண்டு வருகிறது. இதனால், அங்கு வரலாறு காணாத அளவுக்கு உணவு தட்டுப்பாடு ஏற்பட்டு சுமார் 4 லட்சம் பேர் அல்லல்படுகின்றனர். குறிப்பாக 33,000 குழந்தைகள் ஒருவேளை உணவு கூட கிடைக்காமல், ஊட்டச்சத்து இன்றி காணப்படுகின்றனர். இதே நிலை நீடித்தால் எத்தியோப்பியாவில் அடுத்த சில மாதங்களில் 10 லட்சத்து 80 ஆயிரம் பேர் வரை பஞ்சத்தால் மடிந்துபோகக் கூடும் என ஐ.நா. பாதுகாப்பு குழு உறுப்பினர் ஒருவர் ஐ.நா.வில் எடுத்துரைத்தார்.

Add your comment

Your email address will not be published.

six − 5 =