விசாரணைக்கு பிரதமர் உத்தரவு

இஸ்ரேலில் கூட்ட நெரிசலில் சிக்கி 45 பேர் பலியான சம்பவம்

இஸ்ரேல் நாட்டின் மெரோன் மலையடிவாரத்தில் உள்ள ஆலயத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற யூத மத திருவிழாவின்போது லட்சக்கணக்கானோர் பங்கேற்றதால் ஏற்பட்ட நெருக்கடியின் காரணமாக 45 பேர் உயிரிழந்தனர். 150க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் பெரும்பாலானோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையே, இறந்தவர்களின் சடலங்கள் அடக்கம் செய்யப்பட்டு வருகின்றன. சம்பவ இடத்தை பார்வையிட்ட இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, இந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடுவதாகவும், இதுபோன்ற நிகழ்வுகள் எதிர்காலத்தில் நிகழாது என்றும் உறுதியளித்தார்.
இந்த சம்பவத்தில் காயங்களுடன் மீட்கப்பட்ட டேவிட் என்பவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, நெரிசலால் நாங்கள் ஓர் ஓரமாக தூக்கி வீசப்பட்டோம். பெரும்பாலானோர் காற்றில் பறந்ததைக் காண முடிந்தது. இன்னும் சிலர் கீழே விழுந்து நொறுங்கினர் என்றார்.

பலியானவர்களில் பெரும்பாலானோர் வெளிநாட்டினர் என்றும் அவர்களது இறுதிச்சடங்கில் பங்கேற்க குடும்பத்தினர் விருப்பப்பட்டால், அதற்கு உதவ தயாராக இருப்பதாக இஸ்ரேலின் எல் அல் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

Add your comment

Your email address will not be published.

1 + thirteen =