என்ஜினீயரிங் கட் ஆப் அதிகரிக்கிறது

 

மிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின. இதில், கடந்த கல்வியாண்டில் பிளஸ் 2 பயின்ற அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. முதன்முறையாக தசம எண்களில் உதாரணத்துக்கு 68.5 என்ற முறையில் மதிப்பெண் வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தக் கல்வியாண்டில் 600}க்கு 600 என முழு மதிப்பெண் எந்த மாணவரும் பெறவில்லை அல்லது அளிக்கப்படவில்லை.

அதேசமயம், 550 மதிப்பெண்களுக்கு மேல் 9,679 மாணவர்கள் பெற்றிருக்கின்றனர். அதிகபட்சமாக 451 முதல் 500.99 வரையிலான மதிப்பெண்களை 2,22,522 மாணவர்கள் அதாவது 27.25 சதவீத மாணவர்கள் பெற்றுள்ளனர். இவ்வாறு கல்வித் துறை இந்த ஆண்டு தாராளம் காட்டியதாலும், பிளஸ் 1 வகுப்பில் தேர்ச்சி பெறாத 33,557 மாணவர்களை பிளஸ் 2வில் தேர்ச்சி பெற்றதாக அறிவித்ததாலும், நிகழாண்டு என்ஜினீயரிங், வேளாண்மை, கால்நடை, சட்டம் உள்ளிட்ட தொழிற்கல்வி படிப்புகளின் கட் ஆப் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

ஏனெனில், இந்தக் கல்வியாண்டில் அறிவியல் பாடப்பிரிவில் 551 முதல் 600 மதிப்பெண்கள் வரை 30,599 மாணவர்கள் பெற்றிருக்கின்றனர். இதே மதிப்பெண்களை கடந்த கல்வியாண்டில் வெறும் 1,867 மாணவர்கள் மட்டுமே கடினமாக படித்து பெற்றிருந்தனர். இதன் காரணமாக கடந்த கல்வியாண்டில் 150 கட் ஆப் மதிப்பெண் எடுத்த மாணவருக்கு பொறியியல் பயில வாய்ப்பு கிட்டியது.ஆனால், இந்தக் கல்வியாண்டில் கல்வித்துறையின் கொடைகுணம் காரணமாக மாணவர்களின் தேர்ச்சி வீதம் அதிகரித்திருப்பதால், கட் ஆப் மதிப்பெண் 170க்கு மேல் செல்ல வாய்ப்பிருப்பதாக கல்வியாளர்கள் கருதுகின்றனர்.

Add your comment

Your email address will not be published.

one × 1 =