வங்கதேசத்தில் கடலில் மூழ்கிய 2 யானைகள் மீட்பு

வங்கதேசத்தின் அண்டை நாடான மியான்மரில் இருந்து ஆற்றுப்படுகை வாயிலாக இரை தேடி வங்கதேசம் வந்த 2 யானைகள், உள்ளூர் மக்கள் விரட்டியதால், வங்கக் கடலில் இறங்கின. பின்னர், கடலிலேயே 4 நாள்களை கழித்த அந்த இரு யானைகளும், கடலின் ஆழமான பகுதியில் சிக்கி, உயிருக்குப் போராடின. யானைகள் பிளிறியதால், அப்பகுதியே அதிர்ந்தது. தகவலறிந்த மீட்பு படையினர், உள்ளூர் மீனவர்களின் உதவியுடன் கயிறுகட்டி அந்த யானைகளை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். அவற்றை பாதுகாப்பாக வனப் பகுதியில் விட மீட்பு படையினர் முடிவு செய்திருக்கின்றனர்.

Add your comment

Your email address will not be published.

eleven + 8 =