இந்தியாவில் கரோனா உச்சத்துக்கு மத்தியிலும் தேர்தல்!

 

இந்தியாவில் கரோனா பரவல் உச்சத்தை அடைந்த போதிலும், மேற்கு வங்கத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற சட்டப் பேரவை 8ஆம் கட்ட தேர்தலில் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். அவர்களில் பெரும்பாலானோர் முகக் கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமலும் நின்றதால், மேற்கு வங்கம் அடுத்தகட்ட கரோனா பரவலுக்கான மையமாக மாறிவிடுமோ என நிபுணர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

உலகிலேயே அதிகபட்சமாக இந்தியாவில் வியாழக்கிழமை 3,79,257 பேருக்கு கரோனா உறுதியானது. சட்டப் பேரவைத் தேர்தலின் இறுதிகட்டத்தை பூர்த்தி செய்யும் மேற்கு வங்கத்தில் கடந்த புதன்கிழமை மட்டும் 17,000 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டது.

மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சியமைப்பதில் முனைப்புடன் செயல்பட்டுவரும் பிரதமர் மோடி, கரோனா பரவலை ஒருபொருட்டாக எண்ணாமல், ஆயிரக்கணக்கான மக்களைக் கூட்டி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டதாகவும், அதில் பெரும்பாலானோர் கரோனா நிலையான வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்ற தவறியதாவும் விமர்சனம் எழுந்திருக்கிறது.

Add your comment

Your email address will not be published.

13 − thirteen =