பிரதமர் மீது விசாரணையை தொடங்கியது தேர்தல் ஆணையம்

வலுக்கிறது சிக்கல்

பிரதமர் போரிஸ் ஜான்சன் டவ்னிங் தெருவில் உள்ள தனது அதிகாரபூர்வ இல்லத்தை புதுப்பித்ததில் முறைகேடு அரங்கேறியதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் முறையான விசாரணையை புதன்கிழமை தொடங்கியது. இதற்கான அறிவிப்பு வெளியான அடுத்த சில மணிநேரங்களிலேயே அமைச்சர்களுக்கு உதவும் வகையில், சுதந்திரமான ஆலோசகரை பிரிட்டன் அரசு நியமித்துள்ளது.
ஏற்கெனவே நன்கொடை விவகாரம் தொடர்பாக அமைச்சர்களிடம் கேள்வி எழுப்பி வந்த தேர்தல் ஆணையம், இதில் சந்தேகிக்கும் வகையில் நிகழ்வுகள் நடந்திருக்க முகாந்திரம் இருப்பதாகக் கூறி, விசாரணையை அதிகாரபூர்வமாக தொடங்கியுள்ளது.

முன்னதாக எம்.பி.க்கள் மத்தியில் இந்த விவகாரம் குறித்து பதிலளித்த பிரதமர், அதற்கான நிதியை தனிப்பட்ட முறையில் செலுத்தியதாக தெரிவித்திருந்தார். இதுகுறித்து அமைச்சரக செய்தித்தொடர்பாளரிடம் கேட்டபோது, பிரதமர் கடன்பெற்று அதிகாரபூர்வ இல்லத்தை புதுப்பித்ததாக கூறப்படுவதை மறுத்தார். மேலும், பிரதமர் நன்னடத்தை விதிகளுக்கும், தேர்தல் ஆணைய சட்டத்திட்டங்களுக்கும் உட்பட்டு செயல்பட்டதாக விளக்கமும் அளித்தார்.
இதனிடையே, நன்கொடை பெற்றதற்கான விவரத்தை எழுத்துபூர்வமாக வெளியிடக் கோரி, பிரதமரிடம் அதற்கான வினாத்தாளை வழங்கிய தொழிலாளர் கட்சியின் சர் கெயிர் ஸ்டார்மர், அதில் வரிசெலுத்துபவர்கள், கன்சர்வேடிவ் கட்சி, பிரதமரின் தனிப்பட்ட நன்கொடைதாரர்கள் என இவர்களில் யாரிடமிருந்து நிதி பெறப்பட்டிருந்து என்ற கேள்வி இடம்பெற்றிருந்தது.
இதற்கு பிரதமர் பதிலளிக்கையில், இந்தக் கேள்விக்கான விடை என்னவென்றால், இல்லத்தின் சீரமைப்புப் பணிக்கான செலவை நான் தான் சந்தித்தேன். இதில், சட்ட வரையறைக்கு உட்பட்டு செயல்பட்டேன். இதைத்தான் அதிகாரிகளும் எனக்கு ஆலோசனையாக தெரிவித்தனர் என்று குறிப்பிட்டிருந்தார்.

Add your comment

Your email address will not be published.

5 − three =