பொதுமுடக்க தளர்வை தீர்மானிப்பதில் மருத்துவமனை டேடாவுக்கு முக்கிய பங்கு

இங்கிலாந்தில் இறுதிகட்ட தளர்வுகள் ஜூன் 21ஆம் தேதி நடைமுறைக்கு வருவதாக இருந்தது. இந்நிலையில், டெல்டா தொற்றின் வேகம் அதிகரித்துவருவதால், மேலும் 4 வாரகாலத்துக்கு பொதுமுடக்கம் நீட்டிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து திங்கள்கிழமை அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகிறது. இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த வெளியுறவு துறை அமைச்சர் டொமினிக் ராப், பொதுமுடக்க தளர்வுகளை அறிவிப்பதில் மருத்துவமனை டேடா (தரவு) முக்கிய பங்கு வகிக்கிறது. கரோனா தொற்று பரவலுக்கும், மருத்துவமனையில் பதிவாகும் அட்மிஷனுக்கும் இடையே உள்ள தொடர்பை பொருத்தே தளர்வுகள் அறிவிக்கப்படும் என்றார்.

Add your comment

Your email address will not be published.

13 + 15 =