லண்டனில் ஜூன் மாதம் தொடங்குகிறது இ}ஸ்கூட்டர் சோதனை ஓட்டம்

 

காற்று மாசு பிரச்னைக்குத் தீர்வு

 

லண்டனில் மின்சாரத்தில் இயங்கக்கூடிய சுற்றுச்சூழலுக்கு உகந்த மின்னணு ஸ்கூட்டர்களின் சோதனை ஓட்டம் ஜூன் மாதம் தொடங்குகிறது.

முற்றிலும் வாடகைக்கு இயங்கும் இந்த ஸ்கூட்டரை ஓட்டுபவர்கள், ஹெல்மட் அணிந்திருக்க வேண்டிய கட்டாயமில்லை. முதல்முறை ஸ்கூட்டரை வாடகைக்கு எடுக்கும் முன்னர், ஆன்லைனில் அதை ஓட்டுவதற்கான பயிற்சி பெற்றிருப்பது அவசியம். லண்டன் உள்ளிட்ட பெருநகரங்களில் 60 முதல் 150 ஸ்கூட்டர்கள் புழக்கத்தில் விடப்படுகின்றன. ஸ்கூட்டரை வாடகைக்கு எடுப்பவர்கள், நேரம் முடிந்ததும் அதற்கான பார்க்கிங் பகுதியில் நிறுத்திவிட்டு செல்லலாம்.

பிரிட்டனில் தனிநபருக்கு சொந்தமான இ}ஸ்கூட்டருக்கு இதுவரை அனுமதியளிக்கப்படவில்லை. வாடகைக்கு பெறும் ஸ்கூட்டரை சைக்கிள் வழித்தடத்தில் மட்டும்தான் ஓட்ட வேண்டும். எக்காரணம் கொண்டும் நடைபாதையில் ஓட்டக் கூடாது.

லண்டனில் இதற்கான சோதனை ஓட்டம் அடுத்த மாதம் தொடங்கி, 12 மாதங்கள் வரை நடைபெறுகிறது. இதுதவிர ஈலிங், ஹம்மர்ஸ்மித், பல்ஹாம், கென்சிங்டன், செல்ஸீ, ரிச்மோன்ட் ஆகிய நகரங்களிலும் இதன் சோதனை ஓட்டம் தொடங்குகிறது.

இதேபோல், சவுத்வார்க், லாம்பேத் நகரங்களில் நடைமுறை சிக்கல்களுக்கு தீர்வு காணப்பட்டதும், அங்கும் இ ஸ்கூட்டர் சோதனை ஓட்டம் தொடங்குகிறது. இதுதவிர, பர்னெட், காம்டென், ஹவுன்ஸ்லோ ஆகிய நகரங்களும் இதில் இணைய விருப்பம் தெரிவித்திருக்கின்றன.

இதுகுறித்து லண்டனின் வாக்கிங் மற்றும் சைக்கிளிங் கமிஷனர் வில் நார்மன் கூறுகையில், “இது சோதனை ஓட்டத்தின் ஆரம்பம்தான். மேலும், சில பெருநகரங்கள் இ ஸ்கூட்டர் சோதனை ஓட்டத்தில் இணையும் என்று எதிர்பார்க்கிறோம். போக்குவரத்து நெருக்கடியைக் குறைக்கவும், காற்றின் தரத்தை உயர்த்தவும் இ ஸ்கூட்டர் நமக்கு உதவும்’ என்றார் அவர்.

Add your comment

Your email address will not be published.

eighteen − 7 =