பாரிசில் இ-ஸ்கூட்டருக்கு தடை

பாரிசில் இ-ஸ்கூட்டருக்கு தடை
இன்று உலகம் முழுவதும் 100க்கும் மேற்பட்ட நகரங்களில் மின்னணு ஸ்கூட்டர் எனப்படும் இ}ஸ்கூட்டர் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பிரான்ஸ் தலைநகர் பாரிசில் மட்டும் 20,000க்கும் மேற்பட்ட ஸ்கூட்டர்கள் வாடகை அடிப்படையில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், கடந்த வாரம் 31 வயது பெண் ஒருவர் இ-ஸ்கூட்டர் மோதி பாரிசில் உயிரிழந்தார். நிர்ணயிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் அதிகமான வேகத்தில் ஸ்கூட்டர் சென்றதாலேயே அந்த பெண் பலியானதாக கூறப்பட்டது. எனவே, பாரிசில் இ-ஸ்கூட்டர்களின் வேகத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றும், எக்காரணம் கொண்டும் நடைபாதைகளில் இ-ஸ்கூட்டரை அனுமதிக்க கூடாது என்றும் பிரான்ஸ் அரசு அறிவுறுத்தியது. இதை மீறினால், பாரிசில் இ- ஸ்கூட்டர் பயன்பாட்டுக்குத் தடை விதிக்கப்படும் என்றும் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

Add your comment

Your email address will not be published.

eight + thirteen =