கைதட்டினால் மட்டும் போதாது ஊதியத்தையும் உயர்த்த வேண்டும்

 

செவிலியர்களுக்காக குரல் கொடுக்கும் பின்னணி பாடகி

 

கரோனா பெருந்தொற்று காலத்தில் பல்வேறு சவால்களை சந்தித்து, நெருக்கடியான நேரத்திலும் உத்வேகத்துடன் செயல்பட்டுவரும் செவிலியர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்களுக்கான ஊதியத்தை உயர்த்தி வழங்குவதில் பிரதமர் போரிஸ் ஜான்சன் கவனம் செலுத்த வேண்டுமென அறைகூவல் விடுத்திருக்கிறார் இரண்டு பிரிட் விருதுகளை வென்ற பிரபல பின்னணி பாடகி டுயா லிபா.

பிரிட்டனில் இசைக் கலைஞர்களுக்கு வழங்கப்படும் அதிகபட்ச கௌரவமான பிரிட் விருதுகள் வழங்கும் விழா லண்டனின் ஓ2 அரெனா வளாகத்தில் செவ்வாய்க்கிழமை பிரமாண்டமாக நடைபெற்றது. கரோனா தொற்றின் தாக்கம் குறைந்து வருவதால், இதில் சமூக இடைவெளியின்றியும், முகக் கவசம் அணியாமலும் சுமார் 4 ஆயிரம் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில், பிரபல பின்னணி பாடகி டுயா லிபாவுக்கு இரண்டு பிரிட் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டார். இதேபோல், ஜே. ஹஸ், ஹேரி ஸ்டைல்ஸ் மற்றும் டெய்லர் ஸ்டிப் ஆகியோருக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.

பிரிட்டனில் கடந்த ஆண்டு வெளியான பியூச்சர் நாஸ்டல்ஜியா என்ற ஆவணப்படத்துக்கு சிறந்த ஆவணப்படத்துக்கான விருது வழங்கப்பட்டது. விழாவில், சிறந்த பிரிட்ஷ் பெண்கள் விருது பெற்ற பாடகி டுயா லிபா பேசியதாவது;

கரோனா காலத்தில் முனைப்புடன் பணியாற்றும் செவிலியர்களுக்கும், முன்களப் பணியாளர்களுக்கும் வெறும் கரகோசம் வாயிலாக பாராட்டு தெரிவித்தால் மட்டும் போதாது. அவர்களுக்கான ஊதியத்தையும் உயர்த்தி வழங்க வேண்டும். இதன் மீது பிரதமர் போரிஸ் ஜான்சன் பரிசீலனை நடத்த கேட்டுக் கொள்கிறேன். எனக்கு கிடைத்த இந்த விருதுகளை, இன பாகுபாட்டைக் களையவும், முன்களப் பணியாளர்களைப் பேணவும் தனது வாழ்நாளையே அர்ப்பணித்த செவிலியர் டேம் எலிசெபத் அனியன்வுக்கு சமர்ப்பிக்கிறேன் என்றார் லியா.

இதனிடையே 2021 லீப் ஆண்டு அல்ல, இரண்டு விருதுகளை வென்ற லிபா ஆண்டு என்று விழாவில் பங்கேற்றவர்கள் பேசிக் கொண்டனர்.

Add your comment

Your email address will not be published.

10 + ten =