வேல்ஸில் 6 பேர் குழுவாக அமர்ந்து மது அருந்த அனுமதி!

 

வேல்ஸ் மாகாணத்தில் பல்வேறு குடும்பங்களை சேர்ந்த அதிகபட்சமாக 6 பேர் வரை ஒன்றாக அமர்ந்து மதுபான விடுதியின் உள்அரங்கில் மது அருந்த மே 17 முதல் அனுமதி அளிக்கப்படுகிறது. இதேபோல், உணகவகம், கபே ஆகியவற்றிலும் குழுவாக அமர்ந்து உணவு உண்ணலாம். வேல்ஸ் மாகாணத்தில் கரோனா தொற்றின் தாக்கம் வெகுவாக குறைந்துவிட்டதால், பொதுமுடக்க கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதாக கூறிய அதன் முதன்மை அமைச்சர் மார்க் டிரேக்போர்ட், இதன்மூலம் வணிக நிறுவனங்கள் பொருளாதார ரீதியாக புத்துயிர் பெறும் என்றும் தெரிவித்தார்.

Add your comment

Your email address will not be published.

9 + 14 =