பொதுமுடக்கத்தில் மதுப்பழக்கத்துக்கு அடிமையான 5 லட்சம் பேர்

 

 

பிரிட்டனில் பொது முடக்க காலத்தில் ஏறத்தாழ 5 லட்சம் பேர் மதுப்பழக்கத்துக்கு அடிமையானதாக தேசிய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக போர்ட்ஸ்மவுத் பல்கலைக்கழக பேராசிரியர் மாத் பார்கர் கூறுகையில், பொதுமுடக்கம் காரணமாக வேலையிழப்பு, வாழ்வாதாரம் இழப்பு, தனிமைப்படுத்துதல் ஆகியவற்றை எதிர்கொண்டதால், நேரிட்ட விரக்தி காரணமாக மதுப்பழக்கத்துக்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கொவிட் காலத்தில் சுகாதார சேவைகள் மீது அரசு கவனம் செலுத்தியதால், மது விநியோகத்தில் தடை ஏற்பட்டது. இருந்தாலும், மதுப்பழக்கத்துக்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது வியப்பளிக்கிறது என்றார்.

பொதுமுடக்க காலத்துக்கு முன்பாக மதுப்பழக்கத்துக்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை 15 லட்சமாக இருந்தது. தற்போது இந்த எண்ணிக்கை 20 லட்சமாக அதிகரித்திருக்கிறது. அதிலும் 55 முதல் 64 வயதுக்கு உட்பட்டவர்கள்தான் அதிக எண்ணிக்கையில் மதுப்பழக்கத்துக்கு அடிமையாக நேர்ந்ததாகவும், இது கடந்த ஆண்டை காட்டிலும் 8 சதவீதம் அதிகரித்திருப்பதாகவும் இங்கிலாந்து பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Add your comment

Your email address will not be published.

2 + six =