66 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த விமான விபத்தின் மர்ம முடிச்சை அவிழ்க்கும் வறட்சி

அமெரிக்காவின் கலி”ஃ”போர்னியா மாகாணத்தில் வரலாறு காணாத வறட்சி நிலவுவதால், ஏரிகள் வறண்டுவிட்டன. இதிலும் ஒரு நல்லது ஏற்பட்டிருக்கிறது. கடந்த 1965ஆம் ஆண்டு புத்தாண்டு தினத்தன்று இந்த ஏரி வழியாக சென்ற விமானம், ஏரிக்குள் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில், விமானி உள்பட விமானத்தில் இருந்த 4 பேரும் பலியாகினர். இதில், விமானி உடலை மட்டுமே மீட்க முடிந்தது. ஏரியில் தண்ணீர் நிரம்பியிருந்ததால், மற்ற 3 பேரின் சடலத்தையோ, விமானத்தின் எஞ்சிய பாகத்தையோ இதுவரை மீட்க முடியவில்லை. இதற்கான முயற்சி கடந்த 2014ஆம் ஆண்டு வரை நீடித்தது. ஆனாலும், பலன் கிடைக்கவில்லை. தற்போது ஏரிகள் வறண்டு போய்விட்டதால், விமான விபத்துக்கான காரணம் உள்பட 66 ஆண்டுகால மர்ம முடிச்சுகளுக்கு விடை கிடைக்கும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Add your comment

Your email address will not be published.

16 + nine =