தாயாரை இழந்த வலியை மறைக்க ஏராளமாக மது குடித்தேன்

இளவரசர் ஹேரி பேட்டி

 

சசெக்ஸ் மாகாண இளவரசரும், வேல்ஸ் மாகாண இளவரசி டயானாவின் மகனுமான ஹேரி, அமெரிக்காவின் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் ஓப்ரா வின்பிரேக்கு மனவலிமை தொடர்பாக அளித்த பேட்டியின்போது தனது தாயாரை இழந்துவாடும் நாள்களை கண்ணீர்மல்க நினைவுகூர்ந்தார். அவர் பேசியதாதவது;

எனது தாயார் மறைந்த நாள்களில் அந்த வலியை மறைப்பதற்காக ஒருவாரம் அருந்தக்கூடிய மதுபானத்தை ஒரே நாள் இரவில் குடித்து தீர்த்தேன். குறிப்பாக வெள்ளி, சனிக்கிழமை இரவுகளில் முழுவதும் மதுபோதையில் தான் இருப்பேன். அப்போது, அந்த தீராத வலியை மறைக்க தான் குடித்தேனே தவிர, மகிழ்ச்சிக்காக அல்ல. எனது தாயார் மறைந்து 10 வருடங்கள் கடந்த பின்னரும், என்னை நான் இலகுவாக உணர போதை மருந்துகளையும் எடுத்துக் கொள்ள விரும்பினேன் என்றார் அவர்.

வேல்ஸ் மாகாண இளவரசியான டயானா, கடந்த 1997ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பிரான்சில் நடைபெற்ற கார் விபத்தில் பலியானது நினைவுகூரத்தக்கது.

Add your comment

Your email address will not be published.

6 − two =