இந்தியாவில் கட்டுக்கடங்காத வரதட்சணை

இந்தியாவில் வரதட்சணை முறை கடந்த 1961ஆம் ஆண்டு முதல் சட்டவிரோதமாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், உலக வங்கி மேற்கொண்ட ஆய்வில், இந்த 60 ஆண்டுகளில் வரதட்சணை முறை இந்தியாவில் பல்கி பெருகியிருப்பது தெரியவந்துள்ளது. அதிலும், கடந்த 1960 முதல் 2008 வரையிலான காலகட்டத்தில் நடைபெற்ற 95 சதவீத திருமணங்களில் வரதட்சணை இல்லாமல், மாப்பிள்ளைகள் தாலி கட்ட மறுத்தது தெரியவந்திருக்கிறது. இந்தியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட 17 மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இந்த விவரம் வெளியானது.

Add your comment

Your email address will not be published.

18 − 7 =