மஞ்சள் பட்டியல் நாடுகளுக்கு செல்லாதீர்

 

பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவுறுத்தல்

 

மஞ்சள் பட்டியலில் உள்ள நாடுகளுக்கு பிரிட்டன் மக்கள் பயணிக்க வேண்டாமென பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவுறுத்தினார்.

பிரிட்டனில் பொதுமுடக்கத்தில் தளர்வுகள் அமல்படுத்தப்பட்டு வருவதால், பிரான்ஸ், கிரீஸ், ஸ்பெயின் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட மஞ்சள் பட்டியலில் இடம்பெற்றுள்ள நாடுகளுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் படையெடுக்க தொடங்கினர். இந்த நாடுகளுக்கு கடந்த திங்கள்கிழமை மட்டும் 150 விமானங்கள் பிரிட்டனிலிருந்து புறப்பட்டுச் சென்றன. மஞ்சள் பட்டியலில் இடம்பெற்றுள்ள நாடுகளுக்கு பிரிட்டன் மக்கள் சர்வசாதாராணமாக சென்று வரலாம் என்றும், திரும்பி வந்ததும் அவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் சுற்றுச்சூழல் துறை செயலாளர் ஜார்ஜ் யூஸ்டிஸ் தெரிவித்தார்.

இந்தக் கருத்துக்கு மறுப்பு தெரிவித்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியதாவது;

மஞ்சள் பட்டியலில் இடம்பெற்றுள்ள நாடுகளின் பட்டியலை பொதுமக்கள் தெரிந்துவைத்திருப்பது அவசியம். காரணம், விடுமுறை தினங்களை கொண்டாடுவதற்காக இந்த நாடுகளுக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம். இதில் நான் மிகவும் தெளிவாக இருக்கிறேன். ஒருவேளை குடும்ப சூழல், வியாபாரம் உள்ளிட்ட தவிர்க்க முடியாத காரணங்களால், அங்கு செல்ல நேரிட்டால், திரும்பி வந்ததும் அவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். உடல் பரிசோதனை அடிக்கடி செய்து கொள்ள வேண்டும். அவர்களை கண்டறிவதற்கான முகவரியையும் அரசிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்றார் பிரதமர் போரிஸ் ஜான்சன்.

Add your comment

Your email address will not be published.

four + nine =