காலதாமதமின்றி தடுப்பூசியை பெற்றுக் கொள்ளவும்

 

பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்

 

இந்திய வகை கரோனா தொற்று அதிகளவில் கண்டறியப்படும் பிராந்தியங்களில் வசிப்பவர்கள், காலதாமதமின்றி தடுப்பூசியை பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

பிரிட்டனில் கடந்த வாரத்தில் மட்டும் இந்திய வகை கரோனா பரவல் இருமடங்கு அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது. குறிப்பாக, போல்டனில் மருத்துவமனைகளில் இந்திய வகை கரோனா தொற்று பாதிப்புடன் அனுமதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதில், பெரும்பாலானோர் 35 முதல் 65 வயதுக்குள்பட்ட தடுப்பூசி செலுத்தப்படாதவர்கள் ஆவர். இதனால், பிரிட்டன் முழுவதும் இந்திய வகை கரோனா பரவல் கண்டறியப்படும் இடங்களில் வசிப்பவர்கள், காலதாமதமின்றி தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு சுகாதாரத் துறை அமைச்சர் எட்வர்ட் ஆர்கர் அறிவுறுத்தினார்.

மான்செஸ்டர், பிளாக்பர்ன், டார்வென் ஆகிய பகுதிகளில் அதிகளவில் தடுப்பூசி செலுத்தப்படுவதால், அங்கு பாதுகாப்பு பணிக்காக ராணுவம் களமிறக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

Add your comment

Your email address will not be published.

5 − 3 =