இங்கிலாந்தில் ஊதிய உயர்வு கோரி பயிற்சி மருத்துவர்கள் அடுத்த வாரம் செவ்வாய்க்கிழமை முதல் நான்கு நாட்களுக்கு வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். இதனால் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டிருப்பவர்கள் பாதிக்கப்படுகின்றனர். மேலும் வெளி நோயாளிகளும் பயிற்சி மருத்துவர்கள் போராட்டத்தால் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக ஒட்டுமொத்தமாக 2,50,000 நோயாளிகள் பாதிக்கப்பட உள்ளதாக மருத்துவ கூட்டமைப்பு இயக்குனர் டாக்டர் லைலா மெக்கே கூறினார்.
GIPHY App Key not set. Please check settings