கோயிலில் தேங்காய் உடைப்பதன் தாத்பரியம் என்ன தெரியுமா

தேங்காய் திருமணம், திருவிழாக்கள், பூஜைகள், சுபகாரியங்கள், பரிகாரங்கள், சடங்குகள் என நம் வாழ்வில் தேங்காயின் பங்கு மகத்தானது.

கோவில்களில் பெரும்பாலும் இறைவனுக்கு தேங்காய் உடைப்பது வழக்கம் ஏன் தேங்காய் உடைக்கிறோம்.

இதில் என்ன தத்துவம் இருக்கிறது என்ற விவரம் நம்மில் பலருக்கு தெரியாது ஏதோ சுவாமிக்கு அர்ச்சனை பண்ணினோம் தரிசனம் செய்தோம்.

என்றவாறே இதை நாம் தொன்றுதொட்டு செய்து வருகிறோம் அவ்வாறு இல்லாமல் அதன் “தாத்பரியம்” என்ன என்பதை பற்றி நாம் தெரிந்து கொள்வது அவசியம்.

தேங்காய் உடைப்பதில் ஒரு பெரிய உண்மை மறைந்து இருக்கிறது அதனுள் மென்மையான பருப்பும் ஆகிய காய்ப் பகுதியும் நீரும் உள்ளது.

அதாவது தேங்காயின் தத்துவத்தை புரிந்து கொண்டால் கடவுளை தெரிந்து கொள்ளலாம் என்றார் சிக்கல் மிகுந்த நார்ப் பகுதி சமயங்களுக்கு மத்தியில் கிடக்கும் வாதப்பிரதிவாதங்கள் குறிப்பதாகும்.

உறுதியான கடவுளை அடைய வேண்டும் என்ற உறுதியை காட்டுவதாகும் கடந்து வந்தால் நெஞ்சுறுதி பிளந்து உள்ளே இருக்கும் கடவுளை காட்டும்.

தேங்காயை உடைத்து கடவுளுக்குப் படைப்பது ஏன் வெளி மனது சிறகை போல் கெட்டியாக இருந்தாலும் உள்ளேயிருக்கும் ஆத்மாவும் மென்மையானது தூய்மையானது.

அதை நீ ஏற்றுக்கொள் என்று சொல்வதாகவும் எடுத்துக் கொள்ளலாம் அல்லது சிரட்டையை போல் என் மனம் கெட்டிப்பட்டு கிடக்கிறது அதை எடுத்துக்கொள்ளலாம்.

நான் செய்த பாவங்கள் தேங்காயைப் போல் உறுதியாக இருக்கிறது அதை உன் முன்னால் உடைத்து வைத்து விட்டேன் அதை ஏற்று தூய்மைப்படுத்து என்பதாகவும் எடுத்துக் கொள்ளலாம்.

தேங்காய் கந்த மூலப் பொருள் இதை கடவுள் பிரசாதமாக போது மனிதனுக்கு தேவையான சத்வ குணம் மேலோங்கும் இதனால் தான் இந்து மத வழிபாட்டில் தேங்காய் முக்கிய பங்கு வகிக்கிறது.

Add your comment

Your email address will not be published.

one × two =