கரும்பு ஜூஸ் அவசியம் சாப்பிடனும் தெரியுமா

 

கரும்பு ஜூஸ்:

*கோடையில் அதிக வெயிலால் உடலானது அதிக சூடாக இருக்கும் மேலும் அதிக வியர்வையின் காரணமாக அதிக நீரிழப்பு ஏற்படும் பொதுவாக உடலுக்கு தேவையான அளவு நீர்ச்சத்து அவசியம் இந்த நீர் இழப்பை ஈடு செய்ய அதிக தண்ணீர் அருந்துவது கரும்பு சாறு அருந்தினால் ஏராளமான மருத்துவ நன்மைகளை நாம் பெற முடியும்.

அதாவது உடல் சூடு மற்றும் அதிகம் தண்ணீர் குடிக்காத காரணங்களால் நீர்தாரை, எரிச்சல், நீர் குத்தல், தொற்றுகளால், அரிப்பு போன்றவை ஏற்படக்கூடும் இவற்றை சரி செய்யும் தன்மை இந்த கரும்பு சாறுக்கு உண்டு.

*அதிலும் இயல்பாகவே உடல் சூடு அதிகம் உள்ளவர்களுக்கு இது போன்ற பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் இவர்கள் தினமும் ஒரு டம்ளர் கரும்பு ஜூஸ் குடித்தால் இந்த பிரச்சினைகள் வராமல் தடுக்கலாம்.

*நமது உடலில் இதயம் மற்றும் மூளைக்கு அடுத்தபடியாக மிகவும் முக்கிய உறுப்பு இந்த கல்லீரல் நமது உடலில் அதிக பணிகளை செய்வதும் இதுதான் சர்க்கரை கொழுப்பு இரும்புச்சத்து ஆகியவற்றைக் கட்டுப்படுத்துவதில் கல்லீரல் இன் பங்கு மிக அதிகம்.

*புரத உற்பத்திக்கும் இதன் உதவி அதிகம் கல்லீரல் பாதிப்படைவதற்கு மது அதிகம் அருந்துவதாலும் அதிகமான எண்ணெய் உள்ள உணவுகளை தொடர்ந்து சாப்பிடுவதாலும் கல்லீரலில் கொழுப்புக்கள் அதிகம் சேர்ந்து பாதிப்பை ஏற்படுத்தும்.

*பொதுவாக கல்லீரலில் ஏற்படும் பாதிப்புகளில் மஞ்சள் காமாலையும் ஒன்று இந்த மஞ்சள் காமாலை நோயிலிருந்து குணமாக தினமும் இரண்டு டம்ளர் கரும்பு சாற்றுடன் எலுமிச்சை மற்றும் உப்பு சேர்த்து குடித்து வந்தால் விரைவில் குணம் தெரியும்.

*பலருக்கும் சாப்பிட்ட உணவு முழுமையாக செரிமானம் அடையாமல் போவதற்கு காரணம் அவரின் வயிற்றில் உள்ள செரிமான அமிலங்கள் சுரப்பில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகள் மற்றும் குறைபாடுகளே காரணம்.

*இதற்கு கரும்பு ஜூஸ் ஐ அடிக்கடி பருகி வந்தால் வயிறு மற்றும் குடல் சுத்தமடைகிறது மேலும் வயிற்றில் உணவு செரிமானத்துக்கு உதவும் அமிலங்களை சுரப்பை அதிகப்படுத்தும் எனவே அடிக்கடி செரிமான பிரச்சனை ஏற்படுகிறது.

*தினமும் கரும்பு ஜூஸ் சாப்பிடுவது நல்லது அடுத்து இரத்த சோகை உள்ளவர்கள் தினமும் ஒரு டம்ளர் கரும்பு ஜூஸுடன் தேன் கலந்து குடித்து வந்தால் ஹீமோகுளோபின் எண்ணிக்கை அதிகரித்து இரத்த சோகை நீங்கும்.

*கரும்பில் இயற்கையாக உள்ள அல்கலைன் என்னும் பொருள் புற்றுநோயை ஏற்படாமல் தடுக்கக் கூடியது அதேபோன்று நம்மை சுற்றிலும் மாசு படிந்து உள்ளதால் நாம் சாப்பிடுகின்ற உணவு அருந்தும் நீர் சுவாசிக்கும் காற்று இவைகள் மூலம் நமது உடலில் அதிகமாக சேர்ந்துவிடுகிறது.

*இந்த கரும்பு ஜூஸ் மாசுகளையும் நச்சுத்தன்மையை நீக்கி உடலுக்கு புத்துணர்ச்சி தரும் ஆற்றல் கொண்டது எனவே தினமும் காலையில் கரும்பு ஜூஸ் அருந்தி வரும் பொழுது உடலில் உள்ள நச்சுக்கள் அனைத்தும் “வியர்வை மற்றும் சிறுநீர் வழியாக வெளியேறி உடலை” தூய்மைப்படுத்துகிறது.

*கரும்பின் மிக முக்கியமான நன்மை என்னவென்றால்” சிறுநீரக கற்களை குணமாக்குவது” தான் எனவே தண்ணீர் மட்டுமின்றி கரும்பு சாற்றையும் குடித்தால் அந்த கற்கள் எளிதில் உடைந்து கரைந்துவிடும்.

 

Add your comment

Your email address will not be published.

eighteen − three =