140 தொகுதிகளில் முந்துகிறது திமுக

தமிழக சட்டப் பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் பகல் ஒரு மணி வரையிலான நிலவரப்படி, திமுக 146 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் அங்கம்வகிக்கும் காங்கிரஸ் 13 தொகுதிகளிலும், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் தலா இரு இடங்களிலும், மதிமுக 3, விசிக 4, கொங்கு மக்கள் தேசிய கழகம் 1, இந்திய யூனியன் முஸ்லிம் லீக 2 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன.

மறுமுனையில், அதிமுக கூட்டணி 87 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. இதில், பாமக 6, பாஜக 5 தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றன. மக்கள் நீதி மய்யம் நிறுவன தலைவர் கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் முன்னிலை வகிக்கிறார்.

Add your comment

Your email address will not be published.

15 + twenty =