மனைவியை பிரிந்தார் பிரிட்டன் அமைச்சர் 

20 ஆண்டு கால மண வாழ்க்கை முறிந்தது 

பிரிட்டன் கேபினெட் அலுவலக அமைச்சர் மைக்கேல் கோவே தனது மனைவி சாரா வினேயை விவாகரத்து செய்தார். இதன் மூலம் இத்தம்பதியின் 20 ஆண்டுகால திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது. இத்தம்பதிக்கு கடந்த 2001ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது .2 பிள்ளைகள் இருக்கின்றனர். இருவரும் பரஸ்பர சம்மதத்தின் பேரில் தான் இந்த முடிவை எடுத்ததாகவும், தங்கள் பிள்ளைகளை வழக்கம்போல் இருவரும் சேர்ந்து கவனித்துக் கொள்வதாகவும் தெரிவித்தனர். விவாகரத்து செய்தாலும், இருவரும் நண்பர்களாக நட்பைத் தொடர்வது என முடிவு செய்திருக்கின்றனர்.

Add your comment

Your email address will not be published.

nine − 1 =