வெவ்வேறு தடுப்பூசிகளை செலுத்திக் கொண்ட ஜெர்மனி அதிபர்

66 வயது ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மார்கெல் கடந்த ஏப்ரல் மாதம் அஸ்ட்ராஜெனிகா தடுப்பூசியை முதல் தவணையாக செலுத்திக் கொண்டார். இந்நிலையில், இரண்டாம் தவணையாக மாடர்னா நிறுவன தடுப்பூசியை அவர் செலுத்திக் கொண்டிருக்கிறார். வெவ்வேறு தடுப்பூசிகளை செலுத்திக் கொள்வது நல்ல யோசனை என்று கூறிய நிபுணர்கள், ஆனாலும் இதை முன்கூட்டியே உறுசெய்வது கடினம் என்றும் குறிப்பிட்டனர். 16 ஆண்டுகாலம் ஜெர்மனியின் அசைக்க முடியாத சக்தியாக அரியணையில் அமர்ந்திருக்கும் ஏஞ்சலா மார்கெலின் பதவிக்காலம் விரைவில் நிறைவடைவது குறிப்பிடத்தக்கது.

Add your comment

Your email address will not be published.

3 × 1 =